
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் இனவாதத்தை பேசினாலும், தெற்கில் பொதுபல சேனா இனவாதத்தை தூண்டினாலும் இருவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான டிலான் பெரேரா இதனைக் கூறினார்.
மீண்டுமொரு இனவாதத்திற்கு நாட்டில் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.