இந்த நிலையில் தற்போது சுவிட்சருர்லாந்து நாட்டிலும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
மாவீரர் துயிலுமில்லப் பாடலுடன் மாவீரர் வணக்க பாடல்கள் இசைக்க சுவிட்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் உணர்வு பூர்வமாக மலர் வணக்கம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி - களமாடி மரணமடைந்த வீரமறவர்களை நினைவு கூரும் முகமாக தற்போது இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதுடன் இதனைத் தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கலைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்துள்ளார்.
தாயக விடுதலைக்காய் உயிர்நீத்தவர்களின் நினைவுகள் தாங்கிய, இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ஆம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி அகவணக்கம், மலர்வணக்கம், சுடரேற்றல், உறுதிப் பிரமாணம் எடுத்தல் என்பன இடம்பெற்றன.
தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய உணர்வுடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது.
சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் 27.11.2016 பிற்பகல் 13:00 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைத்தொகுப்பு காண்பிக்கப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
தாயக நேரம் 18:05 (13.35) மணியளவில் மணியோசையுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச்சுடரேற்றப்பட துயிலுமில்லப் பாடலுடன் மாவீரர் வணக்க பாடல்களை கலை பண்பாட்டுக் கழகத்தினர் உணர்வுடன் வழங்க சுவிசின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் வருகை தந்தமக்கள் சுடர், மலர் வணக்கம் செலுத்தினர்.