வல்வெட்டித்துறை வன்னிச்சி அம்மன் கோவில் பகுதியில் தமிழீழ தேசியக்கொடியேற்றப்பட்டு மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. காலை வேளை பெரிய அளவிலான கொடிகள் இரண்டு உடுப்பிட்டி- வல்வெட்டித்துறை வீதியோரமாக பனைகளில் ஏற்றப்பட்டிருந்தது. காலை வேளை அவ்வீதியால் பயணித்த மக்கள் உணர்வுபூர்வமாக மாவீரர்களை நினைவில் நிறுத்தி வணக்கம் செலுத்திக் கடந்து சென்றிருந்தனர். எனினும் பின்னர் இவ்விரு கொடிகளும் காணாமல் போயிருந்தது.
கடந்த இரு வருடங்களும் இதே போன்று தேசியக்கொடியேற்றப்பட்டு மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
இவற்றினைத் தாண்டி இம்முறையும மீண்டும் தமிழீழ தேசியக்கொடியேற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.