இதன்போது உரையாற்றிய மாகாணசபை
உறுப்பினர் அஸ்மின், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு
வரும் போது என்ன நிலைப்பாட்டில் கொண்டு வரப்பட்டார். இப்போது முதலமைச்சர்
அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி நடந்து செயற்பட்டு வருவதாகவும், முதலமைச்சரை சூழ
உள்ளவர்கள் அவரை தவறாக வழி நடத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தினார். இதனை தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் சயந்தனும் எழுந்து வரவு செலவு திட்ட முன்மொழிவில் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கேட்ட முதலமைச்சர், விகாரைகள் கட்டப்படுவதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள் எனவும் வெளிநாடுகளுக்கு சென்று மாகாண சபையில் உறுப்பினர்கள் சிலர் குழப்பம் விளைவிக்கின்றார்கள் எனவும் குற்றஞ்சாட்டியதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சரை விமர்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சரை விமர்சிப்பது என்றால் வேறு இடத்தில் விவாதிக்க முடியும் என தெரிவித்ததுடன் சபையை ஒத்திவைக்கலாம் எனவும் கூறினார். இந்நிலையில் சபையை எப்போது ஒத்திவைப்பது எப்போது கூட்டுவது என எனக்கு தெரியும். சபையை கலைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் கூறியதுடன் 'நீ' கீழே இரு எனவும் கூறினார். இதனால் அவை தலைவரை நோக்கி, பேசும் வார்த்தைகளை சிந்தித்து பயன்படுத்துங்கள் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன் இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டது. அப்போது சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்குவதற்காக சென்றார். எனினும் ஏனைய உறுப்பினர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் சில உறுப்பினர்கள் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் அவைத் தலைவர் ஆங்கிலத்தில் தகாத வார்த்தைகளை மீளவும் பயன்படுத்தினார். இதனால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதனையடுத்து, வடமாகாண சபையின் அமர்வுகள் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் ஆரம்பமாகிய போது, “என்னால் சபை அமர்வுக்கு இடையூறு ஏற்பட்டதாக நீங்கள் கருதுவீர்களேயானால் அதற்கு நான் மன்னிப்பு கோருகின்றேன்” என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதற்கு உறுப்பினர் சயந்தன், “சிவாஜிங்கத்தின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். மன்னிப்பு கேட்ட அவரது பெருந்தன்மையை முன்னுதாரணமாக கொள்கின்றேன்” என தெரிவித்தார். இதன்போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் “சம்பவம் நடைபெற்ற போது நானே சிவாஜிலிங்கத்தை சபையின் முன்னால் வருமாறு அழைத்தேன். நான் அழைத்தமைக்கு அமைய அவர் முன்னால் வந்ததை அனைவரும் தவறாக எண்ணி கூச்சல், குழப்பம் விளைவித்து விட்டனர். எனவே சகலதையும் மறந்து விவாதத்தை தொடர்வோம்” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, விவாதம் மீண்டும் ஆரம்பமாகியது. |
வடக்கு மாகாணசபையில் கூச்சல் குழப்பம் - செங்கோலைக் கைப்பற்ற சிவாஜி முயற்சி!
Related Post:
Add Comments