ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் தமிழ் மக்கள் நீதியை எதிர்ப்பார்க்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் யாழ். ஊடக மையத்தில (வியாழக் கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போதைய நிலையில் மேற்குலக நாடுகளை பொறுத்த வரையில் இலங்கையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திரும்பவும் இலங்கை சீன சார்பு நிலைப்பாட்டுக்கு செல்லும் நிலை உருவானால், குறித்த சூழலை கையாள்வதற்கு ஏற்ற வகையிலேயே ஐ.நா. மனித உரிமை பேரவை விவகாரத்தை பயன்படுத்துகின்றது.
எனவே, எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத் தொடரிலும் தமிழ் மக்கள் மகிழ்சியடையும் வகையில் எதுவும் நடைபெறப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்