இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர் பொற்பதி, குடத்தனையைச் சேர்ந்த தங்கவேலாயுதம் - கமலாதேவி (62) என்பவராவார்.
இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த மேலதிக தகவல்கள் வருமாறு,
குறித்த குடும்பப் பெண் நேற்று பகல் அக்கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வொன்றுக்கு நகைகள் அணிந்து சென்றதாகவும், அதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இந்த கொடூர செயலைப் புரிந்துள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு வியாபாரத் தலம் ஒன்று இருப்பதாகவும்., இரவு சுமார் 11 மணியளவில் சென்ற கொள்ளையர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வந்திருப்பதாக அப்பெண்ணின் பெயரை சொல்லி அழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் அவரது கணவர் நோய் காரணமாக மாத்திரை எடுத்து விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இயல்பாக கடைக்கு சாமான்கள் வாங்க யாரோ வந்திருக்கிறார்கள் என்ற நோக்கத்துடன் தனியாக வந்து கடையைத் திறந்த போது அவர் கழுத்திலும் கையிலும் அணிந்திருந்த நகைகளை பார்த்த கொள்ளையர்கள் உடனடியாக அவரது கழுத்தை துண்டித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகைகளையும், கடையிலிருந்த பெறுமதியான பல பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஸ்தலத்துக்குச் சென்றுள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மோப்ப நாய்கள் சகிதம் விசாரணைகளை நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் பெயரைச் சொல்லி அழைத்த காரணத்தினால் குறித்த கொலை, கொள்ளைச் சம்பவங்களில் தெரிந்த நபர் யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் ஊர் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் உடலில் பல காயங்கள் உள்ளதாகவும் நெஞ்சுப் பகுதியில் ஆழமான சிதைவடைந்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன், இன்னமும் சடலம் ஸ்தலத்திலிந்து அகற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.