வடக்கு மக்களுக்கான பொருத்து வீட்டுத் திட்டத்தில் அமைச்சரான டி.எம்.சுவாமிநாதனை எதிர்கொள்ளமுடியாது கூட்டமைப்பு திண்டாடிவருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீள்குடியேற்ற அமைச்சு வழங்கும் பொருத்து வீட்டுதிட்டத்தை எதிர்க்கின்ற போதிலும் பொருத்து வீட்டுத் திட்டத்தை முடித்தே தீருவேன் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விடாப்பிடியாக உள்ளார்.
பொருத்து வீட்டு திட்டத்தை எதிர்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் பிரதமரது செல்லப்பிள்ளையான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூட்டமைப்பு தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார். இவ்வேலையின் மூலம் பெறப்படும் பணத்தில் பெரும்பகுதி தரகுபணமாக ஜ.தே.கவிற்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 அல்லது 8 லட்சம் ரூபா செலவில் கல் வீடுகளை கட்டும் நிலமை உள்ளபோதும் அந்த பணத்தினைப் போல் 3 மடங்கு அதிகளவு பணம் கொடுத்து பொருத்து வீடுகளை கட்டுவதற்கு அரசு முற்பட்டுள்ளது. அதற்காக தாம் நினைத்த நிறுவனம் ஊடாகவே வீடுகளை கட்டவேண்டுமென டி.எம்.சுவாமிநாதன் விடாப்பிடியாக உள்ளார்.
ரணில் சுவாமிநாதனைக் காப்பாற்றி வருவதால் கூட்டமைப்பினைக் கண்டுகொள்ளாதிருப்பதால் வீடமைப்பிற்கு எதிராக குரல் கொடுத்த கூட்டமைப்பு தலைமை திண்டாடிவருகின்றது.