இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்தத் தீர்ப்பை இன்று வழங்கினார். மேற்படி தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில், டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் பேஸ்போல் அணியைச் சேர்ந்த 12 பேரும் உள்ளடங்குகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்ட கனகசபை தேவதாசனுக்கு எதிரான குற்றப்பத்திரம், சட்டமா அதிபரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சந்தேக நகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
கோட்டை ரயில் நிலையக் குண்டுவெடிப்பு - குற்றம்சாட்டப்பட்டவருக்கு 20 வருட சிறைத்தண்டனை!
Related Post:
Add Comments