அந்த வகையில் அரசியல் பழிவாங்கலுக்காகவே விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்கப்படாமல் விளக்க மறியல் நீடிக்கப்பட்டு வருகின்றது என்பது ஒரு சிலரின் வாதம்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இந்த நிலையில் விமல் வீரவங்ச கடந்த கால ஆட்சியில் செய்யப்பட்ட வாகன முறைக்கேடு தொடர்பிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் விமல் வீட்டில் மரணமடைந்த இளைஞனின் வழக்கு விபரங்கள் பற்றிய செய்திகள் இதுவரையில் எந்த நிலையில் உள்ளது என்பது மறைக்கப்படும் விடயமாகவே உள்ளது.
மரணமடைந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதே அப்போதைய வைத்திய அறிக்கைகளின் முடிவு. எனினும் குறித்த வழக்கின் இன்றைய நிலை என்ன?
இதுவே அரசியல் தலைவர்களின் பிள்ளைகளின் மரணம் ஏற்பட்டிருந்தால், வழக்கு காணாமல் போய் இருக்குமா? என்ற கேள்விகளையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.
அனைத்து வகையிலும் கொலை என சந்தேகத்தை ஏற்படுத்தும் ஓர் மரணம் இன்று வரை விசாரணையில் இருக்கின்றதா என்பதும் கூட தெரியாத நிலையே தொடர்கின்றது.
ஆனாலும் அந்த மரணம் தொடர்பில் தற்போது பேசப்படுவதில்லை. குறிப்பாக தந்தையின் பிரிவு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக விமலின் புதல்வி தொடர்பில் பேசப்படுகின்றது.
ஆனாலும் மரணமான இளைஞர் தொடர்பில் எவரும் பேச ஆயத்தமாக வில்லை என அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தற்போதைய அரசின் இவ்வாறான செயற்பாடுகளும் கூட ஒரு வகையில் அரசியல் இலாபங்களுக்காக செயற்பட்டு கொண்டு வருகின்றதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
காரணம் இப்போது விமல் மக்கள் மத்தியில் முன்னரை விடவும் பிரபல்யமாகிக் கொண்டு வருகின்றார். அந்த பிரபல்யமும் கூட அவரது ஏனைய வழக்குகளை மழுங்கடித்து விட முடியும்.
அவ்வாறு பார்க்கும் போது விமலின் கைது, பிணை, உண்ணாவிரதம் அனைத்துமே வேறு ஒரு காரணத்திற்காக இடம்பெறுகின்றா?
ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு எதிரானவர்களும் இணைந்து இப்போது செயற்பாடுகளை செய்து வருகின்றார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
உதாரணமாக விமலை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் செய்வது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய கூறினார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
அவரை தேசிய வைத்திய சாலைக்கு மாற்றுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட வில்லை. அப்படி மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாற்றுவோம் எனவும் துசார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.
ஆனாலும் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விமல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தனர்.
அப்படியாயின் சிறைச்சாலை முடிகளுக்கு முன்னரே அவர்கள் கருத்து வெளியிட்டது எவ்வாறு என்ற கேள்வியும் ஏற்படுகின்றது.
இவ்வாறான விடயங்களை தொகுத்து நோக்கும் போது விமல் தொடர்பில் இரட்டை நாடகம் ஆடப்பட்டு வருகின்றதா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.