அவர்களது போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்திருந்த சரவணபவன் அவர்கள் சமைத்து உண்ணும் உணவை வாங்கி ருசித்திருந்தார்.
அரச வேலை வாய்ப்புக்கோரி போராட்டத்தை முன்னெடுத்துவரும் அவர்கள் இரவு பகலாக போராடி வருவதுடன் யாழ்.மாவட்ட செயலகம் முன்னதாக சமைத்து உணவருந்தியும் வருகின்றனர்.
இந்நிலையினிலேயே இன்று யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக போராடிவருபவர்களை நேரில் சந்தித்த தமிழரசுகட்சி யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரணபவன் பேச்சுக்களினை நடத்தியிருந்தார்.
ஜநாவில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் தமிழரசுக்கட்சி திருட்டுதனமாக ஆதரவளித்திருந்தமை அம்பலமாகியிருந்ததையடுத்து அதன் பிரபலங்கள் முடங்கியிருந்தன. இந்நிலையில் சரவணபவன் முதன்முதலாக வெளிவந்து போராட்டகாரர்களைச் சந்தித்துள்ளார்.
எனினும் நிலவிடுவிப்பு மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் போராட்டங்களை நடந்துவரும் களங்களிற்கு எட்டிக்கூட பார்த்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.