நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் வரை நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டாம்! சுகாதாரப் பணிப்பாளர்!
வலிகாமம் பகுதியின் பல பகுதிகளில் நிலத்தடி நீரானது கழிவு எண்ணெய் கலந்து மாசடைந்துள்ளமை பல்வேறு மட்டங்களிலும் பேசப்படும் விடயமாகும். இவ்விடயம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் கூட்டங்களும் நடைபெற்ற போதிலும் இது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினரின் அறிக்கை வெளிவருவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் காணப்படும் நிலையில் 5 வருடங்கள் தொடர் ஆராய்ச்சி முடிவுகளின் பின்னரே நீரைப் பயன்படுத்துமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். இ. தேவநேசன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இம்மாதம் 8ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்ட பகுதி சுகாதார வைத்திய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாகப் பணிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பிட்ட காலம் வரை எமது கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து ஒரே கிணற்றில் இருந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு தடைவை நீர் மாதிகள் எடுக்கப்பட்டு ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைகள் பெறப்பட வேண்டும் எனவும் இதற்கான செலவுகளை அந்தந்த பிரிவுகளுக்குரிய பிரதேச சபைகளுடன் கலந்துரையாடிப் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முறையில் நீர்ப் பரிசோதனையாது குறைந்தது 3 முதல் 5 வருடங்கள் வரை மேற்கொள்ளப்படுவது விரும்பத்தக்கது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Post:
Add Comments