எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் தமது பூர்வீக காணிகளை கையளிக்காவிட்டால் ராணுவ தடுப்புகளை உடைத்துக்கொண்டு தமது காணிகளுக்குள் பிரவேசிப்போம் என வலி.வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஒட்டகப்புலம் பிரதேசத்தில் ராணுவ தடைகள் காணப்படும் வீதிக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலி. வடக்கு வசாவிளான் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமது காணிகளுக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல், அவற்றில் விவசாயம் செய்து ராணுவம் லாபம் சம்பாதிப்பதாக தெரிவித்த இம் மக்கள், இனியும் பொறுமை காக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர்.
எதிர்வரும் நான்காம் திகதிவரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்த மக்கள், அன்றைய தினம் காணிகளை விடுவிக்காவிட்டால் ராணுவத்தின் தடுப்புகளுடன் காணப்படும் மூன்று வீதிகளுள் ஒரு வீதியை உடைத்துக்கொண்டு உட்செல்வோம் என மேலும் தெரிவித்தனர்.