புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் ரணில், சம்பந்தன் உரை!


இந்திய மன்றம், இந்திய அரசின் தேசிய புலனாய்வு முகவர் நிலையம் மற்றும் ஹரியானாவின் சுவர்ண உற்சவ குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில்  தீவிரவாத எதிர்ப்பு  மாநாடு இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நடைபெறவுள்ளது. 'இந்திய கடற்பிராந்தியத்தில் தீவிரவாதம்' எனும் தொனிப்பொருளில் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், சட்டம் ஒழுங்கு மற்றம் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

ந்திய மன்றம், இந்திய அரசின் தேசிய புலனாய்வு முகவர் நிலையம் மற்றும் ஹரியானாவின் சுவர்ண உற்சவ குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நடைபெறவுள்ளது. 'இந்திய கடற்பிராந்தியத்தில் தீவிரவாதம்' எனும் தொனிப்பொருளில் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், சட்டம் ஒழுங்கு மற்றம் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
           
30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நாளை மாலை 5 மணியிலிருந்து 6.30 வரையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீட் அன்சாரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேபாளத்தின் பிரதி பிரதமர் பிமலேந்திரா நிட்கி, இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய மன்றத்தின் பணிப்பாளரும் இந்திய ரயில்வே இணை அமைச்சருமான சுரேஷ் பிரபு, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் தலைமையில் விசேட அமைச்சரவை அமர்வொன்றும் நடைபெறவுள்ளதோடு இரவு நேர விருந்துபசாரமும் நடைபெறும்.
இரண்டாம் நாளான 15ஆம் திகதி ஜம்மு கஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் 'நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாதத்தை கையாளுதல்' எனும் தலைப்பில் முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது. அதனையடுத்து இந்திய உள்துறை செயலாளர் ரஜீவ் மீக்ரிஷி மற்றும் இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி பிரகாஷ் மலிக் ஆகியோர் தலைமையில் 'தெற்காசிய பிராந்தியத்தில்' பயங்கரவாதம் எனும் தலைப்பில் இரண்டு அமர்வுகளும் நடைபெறவுள்ளன.
அதனையடுத்து நேபாளத்தின் முன்னாள் பிரமர் பாபுராம் பத்தாரி தலைமையில் நடைபெறும் 'துப்பாக்கி ரவையிலிருந்து வாக்குச்சீட்டுக்கு' எனும் தலைப்பிலான சிறப்பு அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் எதிர்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவைருமான இரா.சம்பந்தன் முக்கிய உரையாற்றவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, மலேசியவின் பிரதி உள்துறை அமைச்சர் நூர் ஜட்சான் மொஹமட் தலைமையில் நடைபெறும் ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள தீவிரவாதம் எனும் தலைப்பில் அமர்வொன்று இடம்பெறவுள்ளதோடு இந்நாளின் இறுதி அமர்வாக இந்திய வெளிவிவாகரங்களுக்கான மத்திய இராஜங்க அமைச்சர் வி.கே.சிங் தலைமையில் 'மேற்கு ஆசியாவில் தீவிரவாதம்' எனும் தலைப்பிலான அமர்வு இடம்பெறவுள்ளது.
மாநாட்டின் மூன்றாவதும் இறுதியுமான 16ஆம் திகதி இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் 'இந்திய கடற்பிராந்தியத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான கூட்டுறவுப் பொறிமுறை' எனும் தலைப்பில் அமர்வொன்று இடம்பெறுகின்றது. இறுதி அமர்வாக இந்திய மத்திய உள்துறை அமைச்சின் ஆலோசகர் விஜயகுமார் தலைமையில் இந்திய கடற்பிராந்தியத்தில் இடதுசாரி அடிப்படைவாதிளால் ஏற்படும் பிரச்சினைகள்' எனும் தலைப்பிலான அமர்வு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து 'தீவிரவாத எதிர்ப்பில் சர்வதேச நிறுவனங்களின் வகிபாகம்' என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறையொன்றும் நடைபெறவுள்ளது. இதனைவிடவும் பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு துறை சார் நிபுணர்கள், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவு பணிப்பாளர்கள் என பல்வேறு முக்கியஸ்தர்கள் முக்கிய உரைகளையும் நிகழ்த்தவுள்ளனர்.
குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நிபுணர் ரொபின் சிம்கொக்ஸ், இந்திய வெளிவிவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் எம்.ஜே.அக்பர், அமைச்சர் சாகல ரட்நாயக்க, இலங்கையின் பதில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன கெட்டியிராச்சி, சிங்ப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், அவுஸ்திரேலிய நீதித்துறை அமைச்சர் மிச்சல் கீனன், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ஆலொசகர் மொஹமட் ஹனீபா அட்மர், அமெரிக்காவின் வெளிவிவகார கவுன்சிலின் துணைத்தலைவர் லைன் பேர்மன், இந்திய கடற்பிராந்திய சங்கத்தின் செயலாளர் நாயகம் கே.வி.பக்கிராக் உள்ளிட்டோரும் உரையாற்றவுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila