முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி பதில் தேடியும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட வருமாறு அழைப்பு விடுத்தும் 200 தொழிற்சங்கங்கள் நாளை மெதமுலன செல்லவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சபையின் ஏற்பாட்டாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கம் மஹிந்த ராஜபக்ஷவை அழைப்பதாக நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அரச நியமனங்கள் எதனையும் வழங்க முடியாது என்ற போதும் அண்மைய காலங்களில் நியமனங்கள் பல வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரயில் திணைக்களத்தில் 3000 பேரை அகற்றி 450 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடல் பல்கலைக்கழகத்தில் 50 பேருக்கும் துறைமுகத்திற்கு 45 பேருக்கும் மேலும் சிலர் அரச அச்சகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக பியசிறி விஜேநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கியபோது தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆனால் இம்முறை அவர்கள் மௌனம் காப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.