புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 7.5 ஏக்கர் காணிகள் நேற்று உத்தியோகப் பூர்வமாக இராணுவத்தினரிடமிருந்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரம்பத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் பெரிதும் சேதமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
மேலும் மீள்குடியேறிய பொதுமக்களின் கண்முன்னே அவர்களது வீடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளுக்குள் தற்பொழுதும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக அங்கு மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான இராணுவத்தினரின் நடவடிக்கைகளை தடுக்க முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.