இவ்வாறு அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்வதன் ஊடாக மக்களை எழுப்பிவிட முடியுமா என இந்த அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அவசியமான முறையில் வேலை செய்வதற்கு தான் தயார் இல்லை எனவும், அவருடன் ஒப்பந்தம் செய்து கொள்பவர்களிடம் இருந்து எந்த தடை வந்தாலும், இந்த திட்டம் நிச்சியம் மேற்கொள்ளப்படும். மக்கள் குறித்து நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.. நீங்கள் அது குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என, இரு அமைச்சர்கள் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை பிரதமர் திட்டியுள்ளார். ராஜபக்சர்களுடன் இன்று ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளவர்கள் யார் என முழு நாட்டிற்குமே தெரியும் என இதன்போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு சூடான கருத்து பரிமாற்றத்தின் போது வழமையை போல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால அமைதியாக இருந்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. |
அமைச்சரவைக் கூட்டத்தில் வெடித்து பொங்கிய ரணில்- மௌனம் காத்தார் மைத்திரி!
Related Post:
Add Comments