தென்னாபிரிக்கா ஜொஹானஸ்பேர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரீலங்காவில் உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை சம்பவங்களை உள்ளடக்கிய இந்த ஆவணத்தை ஐ.நாவின் மீள்பார்வைக்காகச் சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்பானத்தின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் காலத்திற்குக் காலம் காத்திரமான மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் யூ.பி.ஆர் எனப்படும் சர்வதேச காலாகால மீளாய்வுச் செயற்பாட்டின் 28 ஆவது கூட்டம் இலங்கை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவைக்குண்டான கடப்பாடுகள் தொடர்பிலான பொறுப்புக் கூறலை வலிறுத்தும் நோக்கிலேயே இந்த சர்வதேச காலாகால மீளாய்வு ஐ.நா மனித உரிமை பேரவையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போரின்போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் முன்னைய ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல 2015 ஜனவரியில் பதவியேற்ற மைத்திரி-ரணில் ஆட்சியின் போதும் இடம்பெற்று வருவதாக ஐ.ரி.ஜே.பி காலங்காலமாகத் தெரிவித்து வருகிறது. ஐ.நா விலும் சர்வதேச அரங்கிலும் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மிகமோசமான போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான சம்பவங்கள் முன்கொணரப்பட்ட வித்திட்ட ஐ.நா நிபுணர்கள் குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான ஜாஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கும் ஐ.ரி.ஜே.பி இந்த ஆவணப்படுத்தலை மிகவும் துல்லியமான முறையில் மேற்கொண்டுள்ளது. இந்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை சம்பவங்கள் சாட்சியங்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்தவாரம் நிறைவடைந்த ஐ.நா மனித உரிமை பேரவையின் 34 கூட்டத்தொடரின் போது பக்க நிகழ்வொன்றினை நடத்ததிய சர்வதேச சட்டவல்லுனர் ஜாஸ்மின் சூக்கா வடக்கிலே மிக முக்கியமான சித்திரவதை கூடமாக வவுனியாவில் அமைந்துள்ள ஜோசப் முகாம் எனப்படும் கூட்டுப்படைத் தலைமையகம் காணப்படுவதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட ஐந்து மூத்த இராணுவ அதிகாரிகள் இந்த வதை முகாமிற்குப் பொறுப்பாக இருந்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தது. |
மைத்திரி ஆட்சியில் தொடரும் மனித உரிமைமீறல்கள் - ஐ.நாவிடம் அறிக்கை!
Posted by : srifm on Flash News On 09:09:00
Related Post:
Add Comments