சம்பந்தனை கலையுங்கோ! -விக்கியின் காலைப்பிடித்து கோரிக்கை(காணொளி)

இறுதிப்போரில் பலிகொள்ளப்பட்ட அப்பாவி மக்களை
நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றது. முன்னதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பிற்கு இணங்க ஆயிரக்கணக்கான மக்களுடன் நிகழ்வு இன்று முற்பகல் தொடங்கியது நிகழ்விற்கு முல்லைமாவட்ட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தலைமைதாங்கியிருந்தார்.

நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் அங்கு சென்றிருந்தனர்.

முன்னதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தீபமேற்ற சென்றவேளை அவரை வழிமறித்த பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகள் அவரது காலைப்பிடித்து சம்பந்தனை கலையுங்கோ அவரை உரையாற்ற விடவேண்டாம் என கதறி அழுதனர்.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் வந்தபோது மகஜர் குடுப்பதற்காக சம்பந்தனை தேடினோமே அவர் எங்களை பார்க்காது என்ன வேகத்தில் ஓடிப்போனார். ஐயா அவனை் துரோகி அவனை பேச விடவேண்டாம் என தொடர்ந்தும் உறவுகள் கதறியவாறிருக்க மாவை,சுமந்திரன்,சம்பந்தன் ஆகியோர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றினார். அவர் உரையாற்றியபோது விடுதலைப்போராட்டம் பற்றியும், மக்களின் அவலம் பற்றியும் உரையாற்றியபோது அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இடைமறித்து, “போர் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது போரில் வென்ற படையினருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தீர்களே? இப்போது இவ்வாறு உரையாற்றுகிறீர்களே?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து சம்பந்தன் திக்குமுக்காடியநிகழ்வும் அங்கு இடம்பெற்றது. தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையற்றுச் செயற்பட்டுவருவதாக தொடர் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்ற சம்பந்தன் முள்ளிவாய்க்கால் வந்ததுமே மக்கள் கடும் கொதிநிலையில் காணப்பட்டதாக அங்கிருக்கும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதனிடையே சம்பந்தனிடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை தமிழரசுக்கட்சியின் ஊடகம் ஒன்றின் செய்தியாளர் வம்புக்கு இழுத்ததால் அடிதடியும் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பந்தன் நிகழ்வில் கலந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்தியதால் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். இதனிடையே சம்பந்தன் நிகழ்வினை நிறைவுசெய்வதற்கு முன்பாகவே அங்கிருந்து புறப்பட்டுச்சென்றதாகவும் தெரியவருகின்றது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila