இதற்கமைய, வௌிவிவகார அமைச்சர் பதவி முன்னர் நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராக அர்ஜூன ரணதுங்கவும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.பி.திஸாநாயக்க, சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராகவும், டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன, தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க, தற்போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திம வீரக்கொடி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகவும், திலக் மாரப்பன, அபிவிருத்தி பணிகள் அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக இருந்த மஹிந்த அமரவீரவுக்கு அப் பதவியுடன் சேர்த்து மஹாவலி இராஜாங்க அமைச்சர் பதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. |
9 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் - திலக் மாரப்பனவும் சேர்ப்பு!
Add Comments