முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட உறவுகளை நினைவுகூருமுகாக வடக்கு மாகாணசபையின்; ஏற்பாட்டினில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினில் 7வருடங்களின் பின்னர் முதன்முறையாக அஞ்சலி செலுத்த வந்த இரா.சம்பந்தனின் உரையை குறுக்கிட்டமையினை வன்மையாக கண்டிக்க மாகாணசபையினை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அழைத்துள்ளார்.
நாளை மறுதினம் வடமாகாணசபையின் 93 வது அமர்வின் போது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் கொண்டுவரப்படவுள்ள அவசர பிரேரணையினில் இரா.சம்பந்தனின் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை சபை கண்டிப்பதுடன் இச்செயல் தொடர்பாக பொதுமக்களிடம் கவலையினையும் மன்னிப்பினையும் கோருவதுடன் இதனால் இரா.சம்பந்தனிற்கு ஏற்பட்ட அசௌகரியங்களிற்கு வருந்துவதுடன் வடமாகாணசபை மன்னிப்பினை கோரவும் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அழைப்புவிடுத்துள்ளார்.