இராணுவத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் இளைஞர் ஒருவர் இரவு வேளைகளில் கைதடி தொடக்கம் நாயன்மார்கட்டு மாயனம் வரையான பகுதிகளில் இரும்புக் கம்பிகளைத் திருடி விற்கின்றார் என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாவற்குழியைச் சேர்ந்த இந்த இளைஞர் அதிகாலை பச்சை நிற ரீசேட், காற்சட்டை அணிந்து கறுப்பு நிற மூக்குக் கண்ணாடியுடன் கைதடி, பனை அபிவிருத்திச் சபை அமைந்துள்ள பகுதி யில் இருந்து, நாயன்மார்கட்டு இந்து மயானம் வரையான பகுதிகளில் இரும்பு களைத் திருடுகின்றார். அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்களின் பாதாகைகள் பொருத்தப்பட்டிருக்கும் இருப்புக் கம்பிகளை அபகரிகின்றார்.
இது தொடர்பாக அவரிடம் யாராவது கேட்டால் தான் நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்தவர் என்றும், தனது சகோதரன் கைதடி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றினார், தற்போது கொழும்பில் கடமையாற்றுகின்றார் என்றும் கூறுகி ன்றார்.
இராணுவ முகாம் தேவைக்கே தாம் இவ்வாறு இரும்புகளை எடுக்கின்றேன் என்று கூறுகின்றார். ஆனால் அவர் யாழ்ப்பாணம், ஐந்துசந்தியில் உள்ள கடை ஒன்றித் தினம் இரும்புகளை விற்கின்றார் என்று பிர தேச வாசிகள் கூறு கின்றனர். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டோர் தலையிட்டு திருட்டு நடப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.