மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார். அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன. இந்த தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்வித்த்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்ட்த்தை நட்த்தவுள்ளார். மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது. |
லண்டனில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் - 6 பேர் பலி, 20 பேர் காயம்!
Related Post:
Add Comments