தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய மீனவர் ஒத்தழைப்பு இயக்கத்தின் வட, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன், மன்னார் முள்ளிக்குளம் மக்களின் விடயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயற்பாட்டையே மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லமும் பின்பற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் கவலை வெளியிட்டார். மக்கள் பிரதிநிதிகளின் வாக்குறுதிகளை நம்பி இன்றுடன் 35 நாட்களாக மன்னார் – முள்ளிக்குளம் பரலோகமாதா ஆலயத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி முள்ளிக்குளம் மக்களான தாம் தங்கியுள்ளதாக முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனி லெம்பட் கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான நிலை ஏற்படுமாயின் பரலோகமாதா ஆலய வாளாகத்தில் மீண்டும் தமது போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை பாதுகாப்பதில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆர்வம் காட்டியதாகவும், கர்தினாலின் இந்த நடவடிக்கை காரணமாகவே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனதாகவும் அன்ரனி யேசுதாசன் கடுமையாக சாடினார். |
முள்ளிக்குளம் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்! - ஆயர் இல்லமும் துணைபோனதாக குற்றச்சாட்டு
Add Comments