வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை, வடக்கு மாகாண சபையின் நாளைய தினம் சிறப்பு அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது.
சபை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் சபை நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வில் இன்று கலந்து கொள்ள முடியாததால், அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை அமர்வில் எடுத்துக் கொள்ள முடியாது என்று சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.