
வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் மீதான
நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நாளைய அமர்வில் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக நாளை குற்றம் சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராஜா பதில் முதல்வராக கடமையாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறப்பு விசாரணைக்குழு அமைச்சர்கள் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலக்கவேண்டும் என்று பரிந்துரை முன்வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நாளைய மாகாணசபை அமர்வில் குறித்த விடயம் தீவிரமாக ஆராயப்படலாம் என்று பலத்த எதிர்பார்ப்புக்களோடு கூடிய US Hotel தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு விக்கினேஸ்வரன் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தனிப்பட்ட காரணம் ஒன்றின் அடிப்படையில் கொழும்பு புறப்பட்டுச் சென்றிருப்பதாக பிந்திய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் நாளைய அமர்வில் குறித்த விடயம் முக்கியத்துவம் பெறாது என்று தெரியவருகிறது.