
முதலமைச்சரை பதவிநீக்கம் செய்வது என்பதில் உறுதியாக தமிழரசுக்கட்சி வடமாகாண சபையிலுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த செனிவிரட்ன மற்றும் றிசாட் பதியுதினீன் கட்சியை சேர்ந்த ஜெயதிலக ஆகிய உறுப்பினர்களை தொடர்புகொண்டு தாம் கொண்டுவரும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் உங்களுக்கு அமைச்சு பதவி தருவதாக உத்தரவாதப்படுத்தியுள்ளதாக சிங்கள உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.