தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாதவரை இலங்கையின் அமைதி என்பதும் அபிவிருத்தி என்பதும் சாத்தியப்படாத விடயங்களாகவே இருக்கப்போகின்றன.
கடந்த முப்பது ஆண்டு காலயுத்தம் முடிவுக்கு வந்து விட்டதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது போல இலங்கையின் ஆட்சியாளர்களும் பெளத்த மத பீடங்களும் நினைக்கின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில், அவர்கள் தென்பகுதிக்குப் பயத்தைக் கொடுத்த போது, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற முயற்சிகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர்.
அதிலும் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க அவர்கள் பெறுமதி வாய்ந்த ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராக இருந்தார்.
எனினும் அன்றைய சூழ்நிலைகள் அந்தத் தீர்வுத் திட்டம் அமுலாகுவதற்குரிய வாய்ப் பைக் கொடுக்கவில்லை.
இப்போது விடுதலைப் புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டனர் என்ற அடிப்படையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விட யத்தை இழுத்தடிப்பது, காலம் கடத்துவது ஒட்டுமொத்தத்தில் அந்த விடயத்தை அப்படியே கைவிடுவது என்பதுதான் இலங்கை ஆட்சியாளர்களின் முடிவு.
எனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் இருப்பதன் காரணமாக,
தமிழ் அரசியல் தலைமையை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய பேச்சோடு காலம் கழிந்து போகிறது.
உண்மையைச் சொல்லப்போனால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலோ அன்றி தமிழ் மக்களுக்கு உரிமை; அதிகாரம் கொடுப்பதற்கோ ஆட்சியாளர்களுக்கும் பீடாதிபத களுக்கும் அறவே விருப்பமில்லை.
விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுத்தால் மட்டுமே சிங்கள மக்கள் நிம்மதியாகவும் பயப்பீதியின்றியும் வாழ முடியும் என்ற நிலைமை இருந்தது.
அதன்காரணமாகவே புலிகளின் காலத்தில் தனிநாடு தவிர்ந்த வேறு எந்தத் தீர்வையும் அதிகாரத்தையும் தருவதற்கு அரசுகள் தயாராக இருந்தன.
இன்று நிலைமை அதுவன்று. தமிழ் மக்களின் பலமான சக்தியாக இருந்த விடுதலைப் புலிகள் இல்லை என்றாகிவிட்ட பின்னர், தென் பகுதியில் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர்.
எனவே தமிழ் மக்களி ஆக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்கள மக்களுக்கானதேயன்றி அது தமிழ் மக்களுக்கானதல்ல என்ற நிலைப்பாட்டில் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இனப்பிரச் சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.
அதேநேரம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாதவரை இலங்கையின் அமைதி என்பதும் அபிவிருத்தி என்பதும் நிலைத்ததாக இருக்காது என்பதே யதார்த்தம்.