வடக்கு மாகாணசபை விவாகரத்தில் பதவி விலகிய இரண்டு அமைச்சர்களின் இடத்திற்கான புதிய தெரிவு இழுபறியில் உள்ளது. ஏற்கனவே அவ்விரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் தனது பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்துரையாடியிருந்தார்.
இன்றைய தமிழரசுக்கட்சிக்கூட்டத்தில் ஆர்னோல்ட் அவர்கள் கல்விஅமைச்சுக்கான தெரிவாக முன்மொழியப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இதேவேளை ஈபிஆர் எல் எப் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அல்லது மற்றொரு உறுப்பினரான கே.சர்வேஸ்வரனுக்கு கல்வி அமைச்சர் பதவியினை வழங்கவேண்டும் என கோரியுள்ளது.
இதேவேளை தமிழீழ மக்கள் விடுதiலைக்கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் அமைச்சு பதவி கேட்டு முதலமைச்சரினை நெருக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.ஆயினும் தமது தரப்பிற்கு சந்தர்ப்பமொன்றை முதலமைச்சர் வழங்குவாரென நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அமைச்சரவை தொடர்பான இறுதி முடிவை எடுப்பது முதலமைச்சரின் கையில்தான் உள்ளதாக தெரியவருகின்றது.
Add Comments