கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிந்து வெளியேறவேண்டும், எமது பூர்வீக நிலங்கள் எங்களிடம் மீள கையளிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் கேப்பாபுலவு மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஜனநாயக வழிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று இரவு 9.00 மணியளவில் போராட்ட இடத்தில் இருந்த ஒருபகுதி மக்கள் கொழும்பு நோக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பயணம் தொடர்பில் பயணத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,நாங்கள் எங்களின் சொந்த நிலங்களை மீட்பதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாக போராட்டங்களை தொடர்கின்றோம். இந்த நிலையை அறிந்த மத்திய அரசு எங்களின் நிலையை அறிந்தும் அறியாதது போல் இருக்கின்றது.எனவே எமது நியாயமான போராட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசிற்கு நேரடியாக எடுத்துக் கூற முயற்சித்துள்ளோம். அத்துடன், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் படைத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்தும் ஈடுபடவுள்ளனர்.அவர்களுக்கு எமது இன்றைய முயற்சி பக்கபலமாக அமையும் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.மேலும், கேப்பாபுலவில் ஒருபகுதி மக்கள் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாபுலவு மக்கள் இரவோடு இரவாக கொழும்பு நோக்கி பயணம்

Related Post:
Add Comments