வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

DSC_0061

வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அதற்கு ஆதரவாக இந்த சுவரொட்டிகள் வவுனியாவில் ஒட்டப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
DSC_0056 aa
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila