முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்குவதற்கான திட்டம் கொழும்பிலேயே வகுக்கப்பட்டதையும் அதனை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறியவைத்ததையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்,
வடக்கு முதல்வருக்கு எதிராக தமிழரசுக்கட்சி முன்னெடுத்துவருகின்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று முழு அடைப்புப் போராட்டமும் பேரணிகளும் நடைபெற்றுவருகின்றன.
முன்னதாக யாழ்ப்பாணம் நல்லூரில் ஒன்றுதிரண்ட பல்லாயிரம் மக்கள் முதலமைச்சர் அலுவலத்தில் முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
அதன் போது மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன்,
தமிழரசுக்கட்சி எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும், அதன் பின்னான திட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கு அம்பலப்படுத்தினார்.
தொடர்ந்தும் மக்கள் பணி ஆற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் மக்கள் பணி ஆற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.