வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தனது இராஜினாமா கடிதத்தினை நேற்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார்.
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து விசாரணை குழுவினால் குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களான வட மாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை, தாமாகவே தமது பதவிகளை தியாகம் செய்யுமாறு நேற்று முன்தினம் வட மாகாண முதலமைச்சர் வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில் கோரியிருந்தார். அத்துடன் தமது இராஜினாமா கடிதங்களை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்குமாறும் கோரியிருந்தார்.
அந்தவகையில் நேற்றைய தினம் மாலை வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து முதலமைச்சரிடம் கையளித்தார்.
ஆனால் விவசாய அமைச்சருடன் இணைந்து பதவி விலகுமாறு முதலமைச்சரால் கோரிக்கை விடுக்கப்பட்;ட வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இது வரை தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கையளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.