ஊழல் குற்றச்சாட்டுக்களினிலிருந்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை காப்பாற்ற தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் பாடுபட்டுவருகின்ற நிலையினில் அது ஊழலுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தற்போதைய நடவடிக்கைளும் அமைந்துள்ளதாக விடுத்துள்ள அறிக்கை கடும் விமர்சனங்களை சமூக ஊடகங்களினில் இன்றிரவு தோற்றுவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களிற்கான அமைச்சர்களை விசாரணைக்கு ஒத்துழைக்க வைக்காது காப்பாற்ற முற்படுகின்ற வகையினில் தமிழரசுகட்சி குரல் கொடுப்பது அவர்கள் ஊழலில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதிலும் தனது அமைச்சர்களிடையே பேரவையினில் வெளிப்படுத்த ஏதுவாக பகிர்ந்த அறிக்கையினை ஊடகங்களிற்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கமே பகிர்ந்துள்ள நிலையினில் முதலமைச்சர் இரகசியம் பேணியதாக குற்றஞ்சாட்டுவதையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.