வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு பல மீனவர்கள் காயம்: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு பல மீனவர்கள் காயம்: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்:-


வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பகுதி மீனவர்கள் நேற்று தொழிலுக்காக கடலுக்குச் சென்றவேளை அங்கு தென்பகுதி மீனவர்கள் பலநூறு றோலர் படகுகளில் வந்து கடலட்டைபிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இந்த தென்பகுதி மீனவர்கள் தடைசெய்யயப்பட்ட வலைகள், மற்றும் வெடி மருந்துகளைப்பாவித்தும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதனைக் கண்டுகொண்ட  வடமராட்சி கிழக்க்கு மீனவர்கள் தென்பகுதி மீனவர்ளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

 வாய்த்தர்க்கம் கைகலப்பாகமரியதைத் தொடரந்து சிங்கள மீனவர்கள் தமிழ் மினவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் பல மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர் அத்துடன் தமிழ் மீனவர்களின் மீன்பிடி வலைகள் படகுகள் என்பன பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் தற்போது ஆர்ப்பாட்டம் ஒண்றை முன்னெடுத்துள்ளனர் இதனால் அந்தப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
 
தகவல் - சிவகரன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila