துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது படுகாயம் அடைந்து உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உறவினர்களைச் சந்தித்தபோது யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இரு கை கூப்பி அவர்களின் காலில் தொட்டு கதறி அழுத சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது.
நேற்று பிற்பகல் படுகாயம் அடைந்த நீதிபதி இளஞ்செழியனுக்கு 18 வருடங்கள் நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலராகிய 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமரத்ன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்த நிலையில் அவர்களைச் சந்தித்தபோது மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார்.
நன்றி – விக்னேஸ்வரன் கஜீபன்
நன்றி – நிதர்சன் வினோ