இந்து மதம் அறுவகைப் பிரிவுகளைக் கொண்டது. அதில் ஒன்று சைவசமயம்.
சைவம் என்றால் புலால் உண்ணாமை என்னும் விரதம் பூணுவது. அதனால்தான் சைவம் என்பதற்கு எதிர்ப் பொருள் அசைவம் என்றாயிற்று.
ஒரு சமயத்துக்கு எதிர்ப்பதம் இருக்க முடி யுமா? என்ற கேள்வி எழுமாக இருந்தால், அதில் நியாயம் இருக்கவே செய்யும்.
ஆக, சைவம் என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்த மண்ணில் நமக்குக் கிடைத்த மனிதப் பிறவியின் மாண்பை வாழ்ந்து காட்டுவதனூ டாக உணர்த்துவதே சைவ சமயத்தின் நோக்கம்.
அதிலும் சைவ சமயம் என்பது தமிழ் மக்களைச் சார்ந்துள்ளது.
அதாவது இந்து சமயத்தின் அறுவகைப் பிரிவுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சைவ சமயம் தமிழ் மக்களின் தனித்துவமான சமய மாயிற்று.
ஆயினும் காலத்துக்குக் காலம் ஏற்படக் கூடிய ஆக்கிரமிப்புக்கள், குடியேற்றவாதங் கள், படையயடுப்புக்கள் என்பவற்றின் காரண மாக சமய மாற்றங்களும் நிகழ்ந்தது எனலாம்.
இச்சமய மாற்றம் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாததாக இருந்தாலும் பின்னாளில் தாய்ச் சமயத்துக்குத் திரும்புதல் என்ற நடைமுறை இருந்திருக்க வேண்டும்.
ஆனால் தாய்ச்சமயத்துக்கு திரும்புதல் என்ற கோசத்தை எழுப்பாமல், மதமாற்றத்துக்கு எதி ரான பிரசாரங்களே மேற்கொள்ளப்பட்டன.
இதனால் தாய்ச் சமயமாகிய சைவ சமயமும் வருகைச் சமயமாகிய கத்தோலிக்கமும் சில புரிதலுடன் இணங்கிச் செல்கின்ற நிலைமை ஏற்படாமல் போயிற்று.
உண்மையில் தாய்ச்சமயத்துக்கு திரும்பு தல் என்பதில் என்ற அழைப்புக்கு எவரும் எதிர்ப்பு மனநிலை கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் மதம் மாறியவர்களை மீளவும் தாய்ச் சமயத்துக்கு வாருங்கள் என்று அழைக் காமல், சமய பேதத்தின் மூலம் தாய்ச் சமயமும் வருகைச் சமயமும் தத்தம் சமய வாதத்தை முன்வைத்தன.
இதன்விளைவு ஈழத்தின் ஆதிச்சமயமாகிய - தமிழர்களின் ஒரே சமயமாகிய சைவசமயத்துக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது கூட தாய்ச்சமயத்துக்கு திரும்புங் கள் என்ற கோசத்துடன் ஓர் இயக்கத்தை உரு வாக்கினால்; என் தாய், என் தந்தை, தந்தை யின் தந்தை சார்ந்த சைவ சமயம் என்ற ஆழ் மன நினைவுகள் தாய்ச் சமயத்தின் மீதான விருப்பை வெளிப்படுத்த உதவியிருக்கும்.
இருந்தும் ஈழத்தில் இருக்கக்கூடிய சைவ சமய அமைப்புக்கள் அத்தகையதொரு ஏற்பாட்டைச் செய்யவில்லை என்பதைக் கூறித்தானாகவேண்டும்.
அவ்வாறான அழைப்பின் அடிப்படையில் நாளை மறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள ஆடி அமாவாசை விரதம் என்பது கத்தோலிக்கத் தமிழ் மக்களாலும் அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஓர் உன்னதமான விரதமாக இருக்கும்.
எதுஎவ்வாறாயினும் இப்போதிருக்கக் கூடிய சூழ்நிலையில், தாய்ச் சமயமாகிய சைவ சமயத்தின் உயரிய பண்பாட்டு முறைகளையும் விரதங்களையும் அனுஷ்டியுங்கள் என்ற அழைப்பையாவது எங்கள் கத்தோலிக்க சகோதரர்களிடம் விடுவது பொருத்தமானதாக இருக்கும்.
அவ்வாறான அழைப்பின் அடிப்படையில் நாளை மறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள ஆடி அமாவாசை விரதம் என்பது கத்தோலிக்கத் தமிழ் மக்களாலும் அனுஷ்டிக்கப்பட வேண் டிய ஓர் உன்னதமான விரதமாக இருக்கும்.
ஆம் இந்த மண்ணில் வாழ்ந்து அமரத்து வமடைந்த தந்தையை நினைந்து விரதம் இருந்து நன்றி செலுத்துகின்ற அந்த உன்னதமான விரதம் தமிழர்களுக்குரியது.
எனவே சமயத்தின் பெயரால் ஆடி அமா வாசை, சித்திரா பெளர்ணமி என்ற உயரிய விரதங்களை ஒதுக்கிவிடாமல்,
அமரத்துவம் அடைந்த தம் தந்தை, தாய்க் காக விரதம் இருந்து புனித தீர்த்தம் ஆடி பிதிர்க்கடன் தீர்க்கும் தமிழ்ப் பண்பாட்டில் தமிழர்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும்.
இஃது தோசம் நீக்கி மங்கலகரமாக நம்மை வாழ வைக்கும்.