தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணா விரதப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வது பற்றியோ அல்லது மாற்றுவழிகள் பற்றியோ அரசு இன்னமும் கருசனை கொள்ளவில்லை என் பது வெளிப்படை.
மிக நீண்ட காலமாக விளக்கம் விசாரணை யின்றி தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் அடைபட்டு வதைபடுகின்றனர்.

தங்களின் விடுதலையில் உடன் நடவடி க்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் பலமுறை கோரிக்கை விட்ட போதிலும் அவர் களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ததான எந்தத் தகவல்களும் இல்லை.

அதேநேரம் தங்களின் விடுதலையை வலி யுறுத்தி அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கும்போதெல்லாம் அவர்களைச் சந்திக் கும் தமிழ் அரசியல்வாதிகள், உங்களின் விடு தலை தொடர்பில் ஜனாதிபதியுடன் கதைக் கின்றோம், விரைவில் ஒரு நல்ல முடிவை உங் களுக்கு அறியத் தருவோம், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுங்கள் எனக் கேட்பர்.

அவர்களின் வாக்குறுதியை நம்பி தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் போராட்டத் தைக் கைவிடுவர்.
ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அம்மட் டோடு அரசியல் கைதிகளை மறந்து போவர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்ற மன உணர்வு தனித்து அரசாங்கத்திடம் மட்டும் உண்டென்று யாரும் நினைத்து விடக்கூடாது. 
மாறாக தமிழ் அரசியல் தலைமையிடமும் அரசியல் கைதிகளின் விடுதலையில் உடன் பாடு இல்லை என்பது மறுதலிக்க முடியாத உண்மை.

உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என தமிழ் அரசியல் தலைமை மனப்பூர்வமாக நினைத் திருந்தால், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கு கின்ற சந்தர்ப்பங்களின் போதெல்லாம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண் டும் என்ற நிபந்தனையை விதித்திருப்பர்.

ஆனால் அரசுக்கு ஆதரவு வழங்குகின்ற சந்தர்ப்பங்கள் பல தடவைகள் தமிழ் அரசியல் தலைமைக்குக் கிடைத்தபோதிலும் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் அரசியல் கைதி களுக்கு விடுதலை கொடுங்கள் என நிபந் தனை விதித்து வலியுறுத்தவில்லை.
ஆக, தமிழ் அரசியல் கைதிகளின் நிலைப் பாடுதான் தமிழ் அரசியல் தலைமையின் நிலைப்பாடும் என்பது தெட்டத்தெளிவாகிறது.

இருந்தும் அதனை அவர்கள் வெளிப்படை யாக காட்டினால் தேர்தல் காலங்களில் அது தமக்கு ஆபத்தாகி விடும் என்ற பயத்தின் காரணமாக உண்ணாவிரதம் இருக்கும் போது மட்டும் அரசியல் கைதிகளைப் பார்க்கின்ற ஒரு சம்பிரதாயத்தை தமிழ் அரசியல் தலைமை செய்து வருகிறது.

எதுஎவ்வாறாயினும் தமிழ் அரசியல் கைதி களின் விடுதலை சாத்தியமாவதாக இருந் தால், அதற்கு சர்வதேச சமூகத்தின் தலையீடு மிகவும் அவசியமானதாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila