சங்கமம் இணையத்தளத்தின் கிளிநொச்சி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். சங்கமம் இணையத்தள அலுவலகத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உட்புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கணிணிகள், அலுவலக உபகரணங்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதேவேளையில் குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தனே இருக்கலாம் என்று கிளிநொச்சி வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் மாகாணசபை உறுப்பினர் சயந்தன், போலி முகநூல் ஒன்றில் இருப்பவர் பெண் என நினைத்து தகாத வகையில் உரையாடிய ஆதாரங்களை சங்கமம் இணையத்தளமே வெளியிட்டிருந்தது.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும், கிண்டல்களையும் வெளிப்படுத்திவந்திருந்தது.
இந்தநிலையில் குறித்த இணையத்தள அலுவலகத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மாகாணசபை உறுப்பினர் சயந்தனே இருக்கலாம் என பரவலாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே தென்மராட்சியில் இடம்பெற்ற கடத்தல் மன்றும் வன்முறைச் சம்பவங்களுடன் சயந்தன் தொடர்புபட்டிரு்நதமையும் குறிப்பிடத்தக்கது. கருத்தியலை கருத்தியலால் எதிர்கொள்ளமுடியாத கேவலமான நடவடிக்கை இது என்று நோக்கர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.
இதனிடையே சிலநாட்களுக்கு முன்னர் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். குறித்த செய்திகளுக்கும் சங்கமம் உட்பட்ட இணையத்தளங்கள் முக்கியத்துவம் வழங்கியிருந்தன.
இந்த நிலையில் கிளிநொச்சி தாக்குதல் சம்பவத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் குழுவினரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.