வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஊழல்குற்றச்சாட்டிற்கு உட்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.
மாகாண அமைச்சர்கள் இருவர்கள் மீதான விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் இருவரும் பதவி விலகியிருந்தனர். அதன் தொடராக மற்றைய இரு அமைசர்களையும் மீள் விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுவருகின்றார்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள வடக்குமாகாணசபை அமர்வில் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மீது விசாரணை மேற்கொள்வதற்கான பிரேரணை முன்மொழியப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்கான கடும் முயற்சியில் குறித்த கட்சி ஈடுபட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவந்திருக்கிறது.
இதனை தமிழரசுக்கட்சி உறுப்பினர் எஸ்.பரஞ்சோதி முன்வைப்பார் என்று தெரியவந்திருக்கிறது. அமர்வின் போது முன்னெடுக்கவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயும் உப குழுக் கூட்டம் இன்றைய தினம் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் பரஞ்சோதி இந்த விடயத்தினை சமர்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த தீர்மானத்தினைக் கொண்டுவருவததற்கான ஒப்புதலை சி.வி.கே.சிவஞானம் வழங்கினால் நாளைய மாகாணசபை அமர்வில் முதமைச்சரை அவருக்கு கீழ் இருக்கும் ஐந்து அமைச்சுக்கள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்துவதே தமிழரசுக்கட்சியின் நோக்கம் என தெரியவந்திருக்கிறது.
இதேவேளை, குறித்த தீர்மானத்தை தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தினைக் கொண்டு முதலமைச்சர் நிராகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அவ்வாறான விசாரணை முன்மொழிவை முதலமைச்சர் நிராகரிக்க முற்பட்டால், அவர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாலேயே விசாரணையை நிராகரிக்கிறார் என தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் பரப்புரைக்குத் தயாராகிவிடும் என்கின்றனர் நோக்கர்கள்.
இருப்பினும், அவ்வாறான விசாரணை முன்மொழிவை முதலமைச்சர் நிராகரிக்க முற்பட்டால், அவர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாலேயே விசாரணையை நிராகரிக்கிறார் என தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் பரப்புரைக்குத் தயாராகிவிடும் என்கின்றனர் நோக்கர்கள்.
இந்த நிலையில் ஒரு திரிசங்கு நிலையை நோக்கி முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தள்ளப்படுகிறார் என்பதே உண்மை…