அரசியல் பற்றித் தொடர்ந்து சிலாகிப்பது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதுவுமில்லாத அரசியலை அப்படிப் பேசி னால் என்ன? இப்படிப் பேசினால் என்ன? என்பதாக மக்கள் கருதிக் கொள்கின்றனர்.
சரி, சமூகம் சார்ந்த விடயத்தைப் பேசலாம் என் றால், அதனை யார்தான் கவனிக்கிறார்கள்.
சமூகம் என்பதெல்லாம் வெறும் போலி. நம்ம நம்ம அலுவல்களைப் பார்த்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்ப தாக சமூகப் பொறுப்புள்ளவர்கள் நினைக்கின் றார்கள்.
இதனால் மக்கள் படும் கஷ்டங்களும் துன் பங்களும் நீங்கியபாடில்லை.
சமூக மட்டத்தில் பொதுமக்கள் பல பிரச்சினை களை எதிர்நோக்குகின்ற போதிலும் அவை அனைத்தும் மெளனமாக அனுபவிக்கப்படு கின்றதாகிவிட்டதேயன்றி அதற்கு முடிவு கட்டப் படுவதாக இல்லை.
இவ்வாறு நாம் கூறுகின்ற விடயத்துக்கு நல்ல ஒரு உதாரணம் தெருநாய்த் தொல்லை யாகும்.
ஒவ்வொரு நாளும் தெருநாய்க்கடிக்கு ஆளாகின்றவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றவண்ணமுள்ளனர்.
இதற்காக ஏகப்பட்ட அரச பணம் மருந்து என்றவாறாகச் செலவாகின்றது.
சிலவேளைகளில் தெருநாய்க்கடிக்கு ஆளா னவர்கள் சிகிச்சை பெறத் தவறியதன் காரண மாக உயிரிழந்த சோக சம்பவங்களும் உண்டு.
அதேநேரம் தெருநாய்களின் தொல்லை நாளாந்தம் ஏற்படும் விபத்துக்கள் கொஞ்ச மல்ல.
நாய் குறுக்கே பாய்ந்துவிட்டது. அதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துவிட் டேன். எலும்பு முறிந்துவிட்டது. சுகமடைய ஆறு மாதம் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
என் நாளாந்த உழைப்பில் சீவியம் நடத்தும் என் குடும்பம் எப்பாடுபடப் போகிறது என்ற ஏக் கத்துடன் கூடிய துன்பங்கள் தொடர்ந்து கொண்டி ருந்தாலும் அவை பற்றி அறியாதவர்களும் உணராதவர்களுமாகப் பலர் உள்ளனர்.
ஆக, வடபுலத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப் பாண மாவட்டத்தில் இருக்கக்கூடிய தெரு நாய்த் தொல்லைகளை முற்றாக இல்லாமல் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
குறிப்பாக வடக்கின் ஆளுநர் இது விடயத் தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரை யாடி ஒரு பொருத்தமான முடிவை எடுக்க வேண்டும்.
இல்லையேல், நாய்க்கடிக்கு இலக்காகுதல் - வீதி விபத்துக்களுக்கு ஆளாகுதல் என்ற நிலைமை தொடருவதுடன் மருத்துவச் செலவு களும் அதிகரிக்கவே செய்யும்.
ஆகையால் வடக்கின் ஆளுநர் இதுவிடயத் தில் அதிகூடிய கருசனை எடுப்பது அவசிய மாகும்.
தெருநாய்களின் தொல்லை தொடர்பில் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள் இவ் விடயம் குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதிலும் அது தொடர்பில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்பட்டதாக இல்லை என்பதே முடிவாக உள்ளது.
ஆகையால் தெருநாய்த் தொல்லை தொடர் ந்தும் நீடிப்பதை முடிவுறுத்த பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து தெருநாய்களை இல்லாமல் செய்ய வேண்டும்.