அது ஓர் அமைதியான ஊர். ஆலயத்தின் முன்றலில் அகன்று விரிந்து நிழல் பரப்பும் ஆலமரம்.
மரத்தின் பருமனும் விரிசலும் பழமையின் அடையாளமாகக் காட்சி கொடுத்தது.
ஆலமரத்தின் கீழ் மூன்று பேர் குத்தியிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஆலமரம் மட்டு மல்ல அந்த மூவரும் முதியவர்கள்தான்.
அமைதியான சூழலில் இவர்கள் என்னதான் கதைக்கிறார்கள் என்று அறிய மனம் அவாக் கொண்டது. மரத்தில் மறைந்து நின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுவது என்று அங்கிருந்த பெரியவர் ஒருவர் கூற, மற்றவர் எப்படி என்று சொல்லுங் களன் என்றார்.
அந்தப் பெரியவர் எப்படிக் கடிதம் எழுதுவது என்பதைச் சொல்லுகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வணக்கம்.
கெடுகாலம் உங்களையும் நல்லா கஷ்டப் படுத்துகிறது என்பதை எங்களால் உணர முடி கிறது.
இறைவனை நினையுங்கள். தொடர்ந்தும் தீயன பற்றிச் சிந்தியாதீர்கள். கேடு வருகின்ற போது கெட்ட சிந்தனைகள்தான் முன்னெழும். எதற்கும் பொறுமை, நிதானம் என்பவற்றைக் கடைப்பிடியுங்கள்.
அது சரி, எங்கட சம்பந்தர் ஐயா சொன்னவர் மிக விரைவில் நல்லதொரு செய்தி வரு மென்று.
இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றவருக்கு நாட்டில் நடக்கின்ற சம்ப வங்கள் அக்குவேறு ஆணி வேறாகத் தெரிய வரும் தானே! என்று நாங்களும் நம்பினம்.
அரசியலமைப்புச் சீர்திருத்தப் பணிகள் இன்னும் நடந்து முடியவில்லை போலும். அது வந்துவிட்டால் எல்லாப் பிரச்சினையும் தீரும் என்று சம்பந்தர் ஐயா சொன்னவர்தானே. அதால அந்த அரசியலமைப்புச் சீர்திருத் தத்தை நம்பியிருந்தம்.
ஊடகங்களில் ஒரு செய்தி. அரசியலமைப் புச் சீர்திருத்தத்தின் மூலம் மிகக் குறைந்தளவு அதிகாரங்கள்தான் தமிழ் மக்களுக்கு வழங் கப்படுமென்று ஜயம்பதி விக்கிரமரட்ண கூறி யுள்ளார் என அறிந்தம்.
அதன் பிறகு; சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பும் கிடையாது. பொலிஸ், காணி அதிகாரத்துக்கு எல்லாம் கவுன்சில் நியமனம் என்ற மாதிரித் தகவல் வந்தது.
என்ன நாசமறுப்பு எண்டாலும் வந்து சேரட் டும். சர்வதேச விசாரணையை வலியுறுத்தாத எங்கட தமிழ் அரசியல் தலைமையோட நாங் கள் எதுவும் செய்ய முடியாது என்று நினைத் தம்.
அடக் கடவுளே! இப்ப புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் அறிவித்திருக்கினம்.
இனி எதுவும் நடக்காது என்பது சர்வநிச்ச யமாகிற்று. இந்த விடயம் எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கும் தெரிந்திருந்தது.
ஆனால், அரசியலில் பழுத்த அனுபவ முள்ள கூட்டமைப்பினருக்குத் தெரியாமல் போனதுதான் அதிசயமான உண்மை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றிருந்த கூட்டமைப்பின் தலையில எதையோ போட்ட மாதிரி நிலைமை ஆயிற்று.
இப்படி நாங்கள் சொல்லுகிறது சரியோ பிழையோ தெரியாது. இருந்தும் என்ன மக்காள் உங்கட அரசியலமைப்பும் சரிவராது போல அப்படித்தானே!