மூன்று வருடங்களினுள் தனது கதிரையினை மூன்று தடைவ மாற்றியமைத்ததன் மூலம் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதியை வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நாசமாக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.ஏனைய மாகாணசபைகளில் தவிசாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் அமைப்பை ஒத்தவகையில் பேரவை தலைவரது கதிரையும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையினில் மூன்றாவது கதிரை மாற்றப்பட்டதாக வடக்கு மாகாண பேரவைச் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அவைத்தலைவருக்காக மூன்றாவது கதிரை மாற்றப்பட்ட நிலையில் அவருக்கான கதிரை மாற்றல்களுக்காக இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதி செலவிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
முதலாவதாக அவைத்தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனம் ஒரு குசன் சொகுசு ஆசனமாகும். இதன் பெறுமதி சுமார் 18 ஆயிரம் ரூபா ஆகும்.இந்நிலையினில் அவைத்தலைவர்; ஆசனம் அசௌகரியமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைவாக புதிய ஆசனம் கொள்வனவு செய்யப்பட்டது.
மூன்றாவது கதிரையாக ஏனைய மாகாணசபைகளில் தவிசாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் அமைப்பை ஒத்தவகையில் இம் மாகாணசபையின் தவிசாளரின் கதிரையும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையினில் 65 ஆயிரம் ரூபாவிற்கு குறித்த மூன்றாவது ஆசனம் செய்விக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதி சி.வி.கே யின் கதிரைகளுக்காக செலவிடப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. மூலதனச் செலவு எனும் பெயரில் நிதியைக் கையாண்டு அசௌகரியமில்லை, அழகாக இல்லை என அடிக்கடி கதிரைகளை மாற்றுவதை மட்டுமே செய்திருந்தது அம்பலமாகியுள்ளது.
Add Comments