இராணுவம் மற்றும் வியாபாரிகள் மூலம் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசை ஒருங்கிணைந்த மக்கள் போராட்டத்தின் மூலம் வெற்றிகொள்ள வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார்.
வறுமை தொடர்பாக வறுமை ஒழிப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பின் அறிக்கை மற்றும், காணி, வனம், மீன்பிடி வளங்கள் தொடர்பான தன்னார்வ வழிகாட்டி தமிழ் கைநூல் வெளியீடு நேற்று முன்தினம் யாழ் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் உள்ள நிலப்பரப்பில் நூற்றுக்கு 90 வீதமான காணிகள் அரசுக்கும், மக்களுக்கு 10 வீதம் தான் நிலப்பரப்பும் உள்ளது.
அந்த 10 வீத நிலப்பரப்பையும் பறித்தெடுப்பதற்கு அரசு இராணுவத்தை பயன்படுத்து கிறார்கள். அத்துடன் வர்த்தகம் சுற்றுலாத் துறை மேற்கொள்வதற்கும் காணிகளை சுவீகரிக்கிறார்கள். இதனால் மக்கள் வறுமையில் உள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாhர்கள்.
இரணைதீவு மக்களை அண்மையில் சந்தித்திருந்தோம் அவர்கள் 70 நாட்களாக தமது காணி மீட்புக்காக தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறர்கள்.
அவர்கள் எம்மிடம் கலந்துரையாடும் போது. நாங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோம். அதற்கான காரணம் கடற்படையினர் எமது காணிகளை சுவீகரித்துள்ளார்கள். எம்மீது குற்றங்களை சுமத்தி தாங்கள் எமது காணிகளில் அமர்ந்துள்ளார்கள். என தெரிவித்தார்கள். அதே போன்று மன்னார் பள்ளிமுனை மக்களின் காணி மீட்பு போராட்டமும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
ஆனால் இந்த மீனவ காணிகளை விடுவிக்க முடியாது என்பதற்காக பொதுவான காரணத்தை, அதாவது அப்பகுதிகளில் கேரள கஞ்சா கடத்தல் நடைபெறுகிறது. எனவே அதை தடுப்பதற்காகத் தான் இந்த காணிகளை தாம் வைத்துள்ளதாக பொதுவான காரணம் ஒன்றை கடற்படையினர் தெரிவிக்கிறார்கள்.
அதாவது அரசு 90 வீதமாக காணி தனக்கிருந்தும் மீதியாக உள்ள 10 வீத காணி களை சூறையாடுவதற்கு பல கட்டுக்கதைகள் சொல்லி மக்களை இடம்பெயரச் செய்து அவ ர்களை வறுமைக்குட்படுத்துகிறார்கள். இதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவதற்கு விள க்க வெளியீடுகள் தேவையாகவுள்ளது. அர சானது இராணுவம் மற்றும் வியாபாரிகள் மூலம் மக்களின் காணிகளை பறிக்க முற்படுவதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த வழிகாட்டல் வடக்குப்பகுதிக்கு முக்கியம் தேவை, ஏனெனில் ஒரு இன முரண்பாடு நடைபெற்ற பகுதியில் யுத்தம் நடை பெற்று முடிவடைந்த பகுதியில் அரசுக்கு அழு த்தம் கொடுத்து எமது உரிமைகளை அடைய வேண்டும். நாம் தோற்றுப்போகவில்லை என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து போராடி செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் வேறு மாகாணங்க ளிலும் உள்ளது. ஆகவே, வடக்கு தெற்கு கிழக்கு என சேர்ந்து செயற்படவேண்டியுள்ளது.
இந்த செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என யோசிக்க வேண்டும். இது ஒரு இனத்த க்கோ சமூகத்துக்கோ பிரதேசத்துக்கு அல்ல ஒட்டுமொத்தம்
இலங்கையர்களுக்குமான பிரச்சினையாகவுள்ளது. எனவே ஒருங்கிணைந்த போராட்டம் வெற்றியை
தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.