மே தினக்கூட்டம் ஒன்றில் சம்பந்தரின் கையில் சிங்கக் கொடியை கொடுத்தது போல எனது கையில் வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திணித்து விட்டார்கள் என தெரிவித்த வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், அதற்காக எனது கட்சியை காட்டிக்கொடுக் கவோ, முரண்படவோ இல்லை என தெரிவித்து கடந்த 14 ஆம் திகதி இரவு நடந்தது இது தான் என தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் நேற்றையதினம் விளக்கியுள்ளார்.
சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக்கட்சியினரின் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நீர்வேலி கந்தசுவாமி கோவில் வட க்கு வீதி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஆரம்ப உரை யாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முதலமைச்சருக்கு எதிரான பிரே ரணைக்கு ஆதரவாக முதலில் எனது பெயரை போட்டார்கள் கொண்டு செல் லும் போது எனது கையில் தந்தார்கள். நான் கொடுப்பது சரியில்லை என திருப்பி கொடுத்துவிட்டேன்.
எனது வாகனத்துக்கு முதல் பல வாகனங்கள் ஆளுநர் அலுவலகத்தை நோக்கி சென்று விட்டது. இறுதியில் சென்றதும் நான் தான். எல்லாவற்றையும் கொண்டு வந்து எனது தலையில் தான் போடுகிறார்கள்.
அன்று நடந்ததை பலரும் தவறாக பேசுகிறார்கள். எல்லாரும் எல்லாம் பேச முடியாது. அன்றையதினம் ஆளுநர் அலுவலகத்துக்கு போகும் போது மனவருத்தத்துடன் தான் சென்றேன். போகும் போது என்னை முன்னுக்கு தள்ளிவிட்டார்கள். பிரேரணையை கொடுக்க வேண் டிய சூழ்நிலை, கொடுத்துவிட்டேன்.
கொடுத்து விட்டு ஏதாவது சொல்ல வேண்டும் தானே. அதற்காக வட க்கு மாகாண சபையில் யாரும் நிதி ஊழல் செய்யவில்லை, நிர்வாக மோசடிகள் நடக்கிறது என தெரிவித்து விட்டு இருந்தேன்.
அந்த நேரம் ஊடகவியலாளர்கள் வரவில்லை. பிரேரணையை கொடுப்பது போல் புகைப்படம் எடுக்க வேண் டும் என கேட்டார்கள். மீண்டும் அதை செய்தபோது ஆளுநர் விளையாட டாக, நான் உங்களுக்கு கொடுப்பது போல் உள்ளது என தெரிவிக்கும் போது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அதை வைத்து சிரித்து கொண்டு பிரேரணையை கொடுத்தார் என என்னை கேலி செய்கிறார்கள்.
நான் கொடுத்தது உண்மை. ஆனால் சிலர் கூறுவது போன்று முதலமைச்சருக்கு எதிரான நம் பிக்கையில்லா பிரேரணையை அவைத்தலைவரிடம் கொடுப்பதில்லை அது ஆளுநரிடம் கொடுக்கப்பட வேண் டும். மாகாண சபை முறைமை தெரி யாமல் இவர்கள் பேசுகிறார்கள்.
முத லமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை முதலமைச்சர் விடயம் சிறிய விடயம் அது எனக்கு தேலையில்லை. பதவி என்பது இயல்பாக வரவேண்டும்.
கட்சி முடிவெடுத்தால் நான் அதை செய்ய வேண்டும் அதை செய்தேன். அந்த ஆத்ம திருப்தி எனக்கு உள்ளது. நான் தோற்றாலும் பரவாயில்லை எனது கட்சி தோற்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.