வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வனவள பாதுகாப்பு திணைக்களம் மக்களின் காணிகளை வனப்பகுதிகளாக அடையாளப்படுத்தி வருவதை எதிர்த்து நீதிமன்றபடியேற வடமாகாண சபை முடிவெடுத்துள்ளது.
வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகள் தன்னிச்சையானவையாகவும் ஏதேச்சதிகாரம் மிக்கவையாகவும் காணப்படுகின்றன. பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த காணி அற்ற மக்களிற்காக வவுனியா வடக்கு இரசாபுரம் கிராமத்தில் லைக்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் வவுனியா வடக்கு பிரேதேச செயலக அதிகாரிகள் புதிதாக கிணறுகளை தோண்ட முயன்றவேளை அங்கு சென்ற வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரியொருவர் அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.இதன் பின்னர் கிராமசேவகரையும் அச்சுறுத்தி அந்த கிணறை மூட வைத்துள்ளனர் இது குறித்து நாங்கள் வினவியபோது கிணறு வெட்டப்பட்ட நிலம் பல வருடங்களிற்கு முன்னர் பொதுமக்களின் உணவு உற்பத்திக்காக பிரி;த்து கொடுக்கப்பட்டு விட்டது.
இதேபோன்றே முல்லைத்தீவு கூழாமுறிப்பில் மீள் குடியேற்றத்திற்காக எம்மால் கோரப்பட்ட 179 ஏக்கர் காட்டுப் பிரதேசத்தினில் சுமார் 100 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட முடியும் என வனவளத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு கூழாமுறிப்பில் மீள் குடியேற்றத்திற்காக் கோரப்பட்ட 179 ஏக்கர் காட்டுப் பிரதேசத்தினில் சுமார் 100 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட முடியும் என வனவளத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று , ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் காணி அற்ற குடும்பங்களிற்கு நிலம் வழங்குவதற்காக கூழாமுறிப்பு பிரதேசத்தின் வனப் பகுதியில் வீதியோரம் இருந்த காட்டுப்பகுதியினை 2015ல் இனம் கானப்பட்டது.
அவ்வாறு இனம் கானப்பட்ட பகுதியில் மொத்தம் 549 ஏக்கர் வனப் பகுதியினை வனவளத் துறையினர் மாவட்டச் செயலகந்திற்கு விடுவித்தால் இரு பிரதேச செயலாளர் பிரிவின் காணிஅற்றவர்களிற்கும் முழுமையாக வழங்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போதைய அரசு அந்த இடத்தில் 179 ஏக்கர் மட்டுமே வழங்க முடியும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் புதிய அரசின் நடைமுறைக்கேற்ப வனப்பகுதிகளின் நடவடிக்கைக்கு மீண்டும் அனுமதி பெறப்படவேண்டி இருந்தது.
கூழாமுறிப்பில் எம்மால் அனுமதி கோரிய 179 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக 80 தொடக்கம் 100 ஏக்கருக்கும் இடைப்பட்ட பிரதேசமே அனுமதிக்கப்படவுள்ளது.அப் பகுதியில் அடர்ந்த வாட்டிற்கு முன்னாள் உள்ள சாதாரன காட்டுப்பகுதிகளான இரு துண்டுகளை மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய போக்குகளிற்கெதிராகவே வடமாகாணசபை நீதிமன்ற படியேற முற்பட்டுள்ளது.
Add Comments