இக்கட்டுரை தொடர்பினில் வடகிழக்கிலிருந்து பலத்த எதிர்வினைகள் ஆற்றப்பட்டிருந்ததுடன் பல கண்டனங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பீடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து விகடனின் மாணவ பத்திரிகையாளரான சிவ மகாலிங்கம் அருளினியன் இந்நிறுவனத்தினிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையினில் கேரள டயரீஸ் எனும் புதிய நுர்லுடன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியிருக்கும் இந்நபர் தனது புதிய நாலை எதிர்வரும் 3ம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சபாலிங்கம் மண்டபத்தினில் வைத்து வெளியிடவுள்ளார்.
இந்நிலையினில் பெண்போராளிகளை கொச்சைப்படுத்தியதற்கு யாழினில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.அத்துடன் விடுதலைப்போராட்டத்தினில் மிகப்பெரிய பங்கினையாற்றிய இந்துகல்லூரி பாடசாலை மண்டபத்தை இத்தகைய நடவடிக்கைக்கு வழங்கியதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.அத்துடன் இது தொடர்பினில் பாடசாலை நிர்வாகத்திற்கும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நூலாசிரியர் அளுளினியன் யாழப்பாணத்திலிருந்து வெளியேறி தற்போது இந்தியாவினில் கல்வி கற்று வருவதாக தெரிவித்துள்ளார்.அப்போதே குறித்த கற்பனை கட்டுரையினை அவர் எழுதியதாக சொல்லப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் இந்தியா றோ புலனாய்வு கட்டமைப்பின் தூண்டுதலில் இக்கட்டுரை எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
தமிழினியின் நூல் திரிபுபடுத்தப்பட்டது முதல் விடுதலைப்போராட்ட வரலாற்றினை திசைதிரும்பும் பணியினில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஈபிடிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆலோசகரான கருணாகரனே இந்நூல் வெளியீட்டு பின்னணியினில் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
முன்னதாக அவுஸ்திரேலியாவினில் அகதி பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரொருவரது நூலும் யாழ்ப்பாணத்தினில் இக்கும்பலால் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மரணித்த ஊடகவியலாளர்களது தியாகத்தினில் கட்டியெழுப்பப்பட்ட யாழ்.ஊடகத்துறை தற்போது இத்தகைய கும்பல்களிற்கு வெள்ளையடிக்கும் மையமாகியிருக்கின்றதாவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.