கிழக்கு மாகாணத்தில் பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவன உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து 11வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றாகும்
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் இந்த படுகொலைச் சம்பவம் நடைபெற்றது.
“அக்ஷன் பாம்” தொண்டு நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 4 பெண்கள் உட்பட 17 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அலுவலகத்தில் முடங்கியிருந்த போது, இந்தப் படுகொலை நடத்தப்பட்டது.
இந்தப் படுகொலை தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் ஏற்கனவே அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதும், விசாரணைகளில் ஏற்பட்டிருக்கும் தாமதமும் அசமந்தபோக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருந்த போதிலும் தங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை பலியான பணியாளர்களின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பங்களில் அநேகமான குடும்பங்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளன. சில குடும்பங்களே தற்போதும் அங்கு தங்கியுள்ளன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினரின் விசாரணை, இராணுவ விசாரணை என பல தடவை விசாரணைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது என்றும் இதனால் தனது குடும்பம் மன உளைச்சல்களுக்கு உள்ளாகியிருகின்றன
இந்தப் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களின் இந்தச் சம்பவம் குறித்துப் பேசுவதற்கு அச்சமடைந்திருப்பதோடு, இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இனனமும் தங்களை விடுவிக்க முடியாதவர்களாவே உள்ளனர்.