வியாபார பண்டமாகியது காணாமல் போனோர் விவகாரம்?


Vavuniya-Missing-People-Relations-Protest-

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை தொண்டு நிறுவனங்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தி பிழைப்பு நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழந்துள்ளன. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருவோரே பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சர்வதேச காணாமல் போனோர் தினம் நாளைய தினம் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் லீலாவதி ஆனந்த நடராஜா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மன்னாரிலிருந்து மதகுருமார் சிலர் கிளிநொச்சி வந்து போராடப்போவதாக சொல்கின்றனர். அவர்கள் எதற்காக மன்னாரில் போராடும் மக்களினை கைவிட்டு இங்கு வந்துள்ளனரெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டம் உட்பட போராட்டம் இடம்பெறும் ஏனைய மாவட்டங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகளும் தம்மைக் கையாள முற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறீதரனை அம்பலப்படுத்திய அவர் வடமாகாணசபையினையும் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே அச்சுறுதபட்டுள்ள மக்களுக்கான சங்கம் இலங்கை தமிழ் பெண்களின் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்தும் மற்றும் தமிழ் பெண்களோடு ஒன்றினைந்து பெர்ஸிலுள்ள காசினோபிளாட்ஸ் நகரில் ஒரு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
Vavuniya-Missing-People-Relations-Protest-Missing-People-Protest-03
பல மாதங்கள்ளாக, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஐந்து கிராமங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்க்காக எதிர்ப்பு போராட்டம்களில் ஈடுபட்டு தங்களது உறவுகளுக்காக குரல் கொடுக்கின்றனர்.
அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் பற்றிய பதில்களைப் பெறுவதை அவர்கள் தங்களின் கோரிகையாக முன்வைத்துள்ளனர். உலகிலேயே இலங்கையானது அதிகூடிய வலிந்து காணாமல் ஆக்கபட்டோரை கொண்டிருக்கும் நாடாகும். யுத்தம் முடிவடைந்ததில் இருந்து 146 679 அப்பாவி மக்களின் மரணத்துக்கும் மற்ரும் இழப்பிற்கும் எந்த்தவொரு முடிவும் இன்னும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கமானது இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை தொடர்பில் தீர்வுகாண எடுத்த எந்தவொரு முயற்ச்சியிலும் தோல்வியினையே கண்டுள்ளது.
2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாராளுமன்றத்தில் “காணாமல் போனோர் அலுவலகம்” அமைப்பதற்கு ஒரு மசோதாவை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியது. எனினும், இந்த நாள்வரைக்கும் அது நிறுவப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளை விசாரிக்க பணிக்க பட்ட எல்லா வகையிலும்மான ஆணைக்குழுக்கள் இதுவரைக்கும் எந்தவொரு வழக்குகளையும் விசாரணை செய்து தீர்க்கவில்லை. நாட்டின் செயலற்ற தன்மை காரணமாக நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2017ம் ஆண்டு, ஜூன்மாதம் 26ம் திகதி, இலங்கை அதிபர் சிறிசெனே அவர்கள், இந்த வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பாக நீதிகோரி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார், அதன்போது இந்த எதிர்ப்பு போராடத்தில் ஈடுபடுவோர் சிலர், அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை இலங்கை அதிபரின் கைகளில் ஒப்படைத்தார்கள்.
இந்த சந்திப்பின் முடிவில், கால அளவில் வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பான மூன்று பட்டியல்களை பத்திரிகைகளில் வெளியீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்தார். இவற்றுள் முதலாவது பட்டியலானது இறுதி யுத்தத்தின் முடிவில் யாரெல்லாம் சரணடைந்தார்களோ மாற்றும் யாரெல்லாம் தடுப்புகாவலில் அடைத்து வைக்கபட்டு உள்ளார்கள் என்பதை பற்றிய பெயர் பட்டியலாகும், இரண்டாவது பெயர் பட்டியலானது யாரெல்லாம் இரகசிய தடுப்புகாவல் நிலையங்களில் தடுத்து வைக்கபட்டிருப்பவர்கள் பற்றியது, மற்றும் மூன்றாவது பெயர்பட்டியலானது யாரெல்லாம் பயங்கரவாத தாடை சட்டத்தின்கிழ் தடுத்துவைக்கப்பட்டு இருக்கின்றனரோ அவர்களின் பெயர்பட்டியல் (the third about the detainees under the “Prevention of Terrorism Act” (PTA). ஆனால் இன்றுவரையும் இலங்கை அதிபர் தன்னை சந்தித்து கோரிக்கைகளை சமர்பித்த, இந்த வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பாக நீதிகோரி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு, தான் கொடுத்த வக்குறுதியை நிறைவேற்றுவதில் தொல்வியினையே கண்டுள்ளார். “அரசாங்கம்மானது இப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்காக எதிர்ப்பு போராட்டம்களில் ஈடுபடுவோரின் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும், இதன் ஊடாக இலங்கையில் இன, மத, மற்றும் மொழி என்பவற்றால் வேறுபட்டிருக்கும் மக்களுக் இடையே நல்லிணக்கத்தை கொண்டுவரமுடியும்” இலங்கை பிரச்சார முகாமையாளர் யுவேஸ் போவி தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila