அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தான் தன்னை காப்பாற்றியதாக வித்தியா கொலை வழக்கு சந்தேகநபரான சுவிஸ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். வேலணை மக்கள் என்னைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தபோது விஜயகலா மகேஸ்வரன் வந்து என்னைக் காப்பாற்றினார்.அவர் என்னை எனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வரை என்னுடனேயே இரண்டு மணிநேரமாகக் காத்திருந்தார்.
வித்தியா படுகொலை வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெறுகின்றன. இந்த வழக்கின் 9 ஆவது எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் என்ற சுவிஸ்குமார் சாட்சியம் அளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஆவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையினில் எனது தம்பியை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை குறித்து முறைப்பாடு செய்ய யாழ்ப்பாணம் புறப்பட்டபோது வேலணையில் என்னை வழிமறித்த மக்கள் மின்கம்பத்தினில் கட்டி வைத்து அடித்தார்கள்.
அப்போது அங்கு வந்த விஜயகலர் என்னை சசியின் அண்ணாவா என்று கேட்டார்?. நான் ஓம் என்று சொன்னவுடன் மக்களைக் தாக்க வேண்டாம் என்றும், என்னை அவிழ்த்து விடுமாறும் மக்களிடம் கூறினார்.அதனால் மக்கள் என்னை அவிழ்த்து விட்டார்கள்.
எனது குடும்பத்தினர் அந்த இடத்துக்கு வரும் வரை 2 மணி நேரமாக விஜயகலா என்னுடனேயே இருந்தார். அப்போது இரவு 12 மணி. பின்னர் எனது மனைவியும் எனது அம்மாவும் அந்த இடத்துக்கு வந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனரென அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்
Add Comments