தாயின் கடும் முயற்சியால் லண்டனில் சாதனை படைத்த இலங்கை மாணவி


பிரித்தானியாவின் ஏழ்மையான பகுதியில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் மாணவிக்கு அந்த நாட்டின் உயர் பல்கலைக்கத்தில் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவி உயர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டன், செவன் கிங்ஸ் (Seven Kings) பகுதியில் வாழும் சுபதீனா விமலநாதன் என்ற 18 வயது மாணவியே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் A சித்தியை பெற்றதன் ஊடாக லண்டனில் உள்ள Imperial பல்கலைக்கத்திற்கு அவர் செல்லவுள்ளார்.
மாணவியின் குடும்பத்தில் இரண்டாவது நபராக சுபதீனா பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார். இதற்கு முன்னர் அவரது 22 வயதான சகோதரி கவிமீலா Cambridge பகுதியில் உள்ள St Catherine's பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் கற்று வருகின்றார்.
அந்த மாணவியின் 52 வயதான தாயார் மங்களேஸ்வரி, மற்றும் 62 வயதான தந்தை விமலநாதன் ஆகிய இருவரும் இலங்கையில் பிறந்தவர்களாகும். மகளின் வெற்றியை குறித்து இருவரும் பெரிய அளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
“நானும் எனது சகோதரியும் மருத்துவம் கற்போம் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள் என சுபதீனா தெரிவித்துள்ளார்.”
லண்டனில் இவ்வளவு முன்னேற்றம் கண்டமை ஆச்சரியமளிக்கிறது. எமது பெற்றோரும் ஆசிரியரும் இதற்காக பெரிதும் பாடுபட்டனர். இந்த நாட்டின் உயர் பல்கலைக்கழகத்திற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதனை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் பெற்றோருக்கு எப்போதுமே எங்கள் மீது அதிக கனவுகள் இருந்தன. குறிப்பாக எங்கள் அம்மா எப்போதும் தன்னால் முடிந்தவரை எங்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்கு முயற்சித்தார். எங்களின் கற்றலிலும் அன்பை செலுத்தினார்.
அவ்வாறான பல்கலைக்கழகத்திற்குள் நான் நுழைவதற்கு பின்னால் எனது பெற்றோர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புகளே உள்ளன. எனக்காக அவர்கள் நிறைய கொடுத்துவிட்டனர், அதனால் தான் நான் இன்று இங்கே இருக்கிறேன், அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன்..” என சுபதீனா மேலும் தெரிவித்துள்ளார்.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila